பிறந்த குழந்தையை ஃப்ரிசரில் வைத்த இளம்பெண்…
- IndiaGlitz, [Friday,October 30 2020]
ரஷ்யாவில் 14 வயது சிறுமி ஒருவர் தனக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை பெற்றோரிடம் இருந்து மறைப்பதற்காக பிறந்த குழந்தையை ஃப்ரீசரில் வைத்த சம்பவம் கடும பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரத்தை அடுத்த வெர்க் துலா எனும் கிராமத்தில் வசித்து வந்த 14 வயது சிறுமி பெற்றோருக்குத் தெரியாமலே கர்ப்பம் அடைந்து இருக்கிறார்.
மேலும் பிரசவத்தையும் தன்னுடைய அறையிலேயே யாருக்கும் தெரியாமல் தானாகவே செய்து கொண்டிருக்கிறார். பிரசவத்தில் அவருக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தையைப் பற்றி பெற்றோருக்குத் தெரியகூடாது என்பதற்காக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வீட்டுக்கு வெளியே இருந்த ஒரு கேரேஜில் உள்ள ஒரு ஃப்ரீசரில் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தானாக செய்துகொண்ட பிரசவத்தால் சிறுமிக்கு இரத்தப்போக்கு அதிகமாகி இருக்கிறது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த அவருடைய தாய் ஆம்புலன்ஸை வரவழைத்து இருக்கிறார். ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்த போதுதான், தனக்கு பிரசவம் நடந்ததாகவும் அதனால் ஏற்பட்ட இரத்தப்போக்கு இது என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நலையில் பிறந்த குழந்தையைப் பற்றி கேட்டபோது கேரேஜில் உள்ள ஃப்ரீசரில் வைத்திருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்
இதையடுத்து அங்கு விரைந்த மருத்துவக் குழுவினருக்கு கடும் ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. காரணம் ஏற்கனவே கடும் குளிரைத் தாங்க முடியாத அந்தக் குழந்தை இறந்திருக்கிறது. மேலும் இந்தக் கர்ப்பத்தைக் குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது கடந்த கோடை விடுமுறையின் போது ஒரு 16 வயது சிறுவனால் ஏற்பட்டது என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.