கொரோனா வார்டிலும் பாலியல் கொடுமையா? 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொரோனா நோயாளி!

கடந்த சில வருடங்களாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் சில பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தமிழகத்தில் கூட கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இந்த கொரோனா பரபரப்பில் நாடு முழுவதும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமிக்கு அதே வார்டில் உள்ள ஒருகொரோனா நோயாளி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டெல்லியில் உள்ள சர்தார்பூர் என்ற பகுதியில் பத்தாயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா வார்டு ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்த வார்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சம்பவ தினத்தில் கழிவறைக்கு சென்றபோது அங்கு வந்த 19 வயது வாலிபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரும் அவருக்கு உதவி செய்த இன்னொரு வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் வார்டிலும் பாலியல் தொல்லைகள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது