14 சீசன்கள், 10 ஃபைனல், 4 கோப்பைகள்.. ஆனால் ஒரே கேப்டன் தல தோனி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் தொடரில் 14 சீசன்கள் விளையாடிய நிலையில் அதில் 10வது முறையாக நேற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்றைய போட்டியில் தகுதி பெற்றதை அடுத்து அந்த அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் சிஎஸ்கே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற விவரங்கள் பின்வருமாறு:
2008 - ரன்னர் அப்
2010 - சாம்பியன்
2011 - சாம்பியன்
2012 - ரன்னர் அப்
2013 - ரன்னர் அப்
2015 - ரன்னர் அப்
2018 - சாம்பியன்
2019 - ரன்னர் அப்
2021 - சாம்பியன்
2023 - ஃபைனலுக்கு தகுதி
மேலும் 14 சீசன்கள் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நிலையில் அனைத்து சீசன்களிலும் கேப்டனாக இருந்தவர் தல தோனி என்பதும் இந்த சாதனை முறியடிக்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. 14 சீசன்களில் விளையாடி, 12 முறை பிளே ஆப் தகுதி பெற்று, 10 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று, 4 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக இந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தல தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 முறையும், கௌதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி 2 முறையும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தல தோனியின் இந்த சாதனையை வேறு ஒரு அணியின் கேப்டன் முறியடிப்பது என்பது சாத்தியம் இல்லாதது என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout