ரூ.26 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டங்கள்… தமிழகத்தை சீர்ப்படுத்தும் எடப்பாடியார்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரியலூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சித் திட்டப் பணிகளைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அப்போது ரூ.36.73 கோடி மதிப்பிலான 39 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.26.52 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி உள்ளார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் இதுவரை அரியலூர் மாவட்டத்தில் செய்ப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டப்பணிகளைக் குறித்து விளக்கம் அளித்தார்.
அதோடு 21 ஆயிரத்து 504 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் வழங்கினார். முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இதன் கட்டுமான பணிகளை கண்காணிக்க பொதுப்பணித் துறையில் ஓய்வுப்பெற்ற அதிகாரி பாண்டியராஜனை நியமிக்கவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
முன்னதாக கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்க 2,000 மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதன் முதற்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டன.
அதோடு சமீபத்தில் மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்கான இடஒதுக்கீட்டில் 7.5% உள்இட ஒதுக்கீட்டு வசதியை தமிழக முதல்வர் ஏற்படுத்தி கொடுத்து இருந்தார். இந்த திட்டத்தால் தமிழகத்தில் 435 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அதிரடி திட்டத்தால் தமிழக முதல்வர் தமிழகத்தை மென்மேலும் உயர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com