பிரபல இயக்குனர் குடும்பத்தினர் 14 பேர்களுக்கு கொரோனா: மன உளைச்சலில் தவித்ததாக டுவிட்!
- IndiaGlitz, [Saturday,May 29 2021]
பிரபல இயக்குனர் ஒருவரின் குடும்பத்தினரை சேர்ந்த 14 பேர்களுக்கும் ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த 20 நாட்களாக தான் மன உளைச்சலில் இருந்ததாக அவர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமலாபால் நடித்த ’ஆடை’ மற்றும் வைபவ், ப்ரியா பவானிசங்கர் நடித்த ‘மேயாதமான்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் ரத்தினகுமார். இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ படத்திலும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கடந்த 20 நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் தற்போது தான் அவர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தனர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது வீடு’ என்று பதிவு செய்துள்ளார்.
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு?? ??
— Rathna kumar (@MrRathna) May 29, 2021