சென்னை அருகே 1381 கிலோ தங்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் இன்றிரவு விடிய விடிய அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய வாகனச்சோதனை மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் அதிரடி சோதனை செய்து கோடிக்கணக்கான ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு என்ற பகுதியில் 1381 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தங்கம் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கம் என கூறப்படுகிறது.

இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் இந்த 1381 தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.