1300 ஆண்டு பழமையான விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு…

  • IndiaGlitz, [Saturday,November 21 2020]

 

பாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான இந்து கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கோவில் இந்து கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மன்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் உருவாக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாய் எனும் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டபோது 1300 ஆண்டு பழமையான விஷ்ணுகோவில் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோவில் கோபுரத்துடன் பாரம்பரியமான முறையில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடவே கோவிலுக்கு அருகில் ஒரு குளமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்துக் கலாச்சாரக் கோவில்களில் பெரும்பாலும் குளித்துவிட்டு கோவிலுக்கு போவதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

ஸ்வாட் எனும் பகுதியில் உள்ள பாரிகோட் குண்டாய் என்பது ஒரு மலைப்பகுதியாக இருப்பதோடு அது ஒரு சுற்றுலா தளமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பல கலாச்சாரங்களை மையமாகக் கொண்ட கோவில்களும் பாரம்பரிய அமைப்புகளையும் பார்க்க முடியும். அந்த வகையில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணுகோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதே பகுதியில் பௌத்த கோவில் ஒன்று இருப்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஷாஹி அல்லது காபூர் ஷாஜி (850-1026) என்ற இந்து மன்னனின் ஆட்சிக் காலத்தில் இந்த விஷ்ணு கோவில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் பெரும்பாலும் விஷ்ணுக்கோவில்களே இருப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் விஷ்ணு கோவில்களுக்கு மத்தியில் 1300 ஆண்டு காலத்திற்கு முன்பு விஷ்ணுவிற்கு கோவில் அமைத்திருப்பதைப் பார்த்து வரலாற்று ஆய்வாளர்கள் தற்போது புது வழிமுறைகளில் தங்களது ஆய்வுகளை தொடங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தண்ணீரில் குளிச்சா உயிர் போய்விடும்… இப்படி ஒரு விசித்திர வியாதியா???

அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவருக்கு தண்ணீரில் குளித்தாலே உயிர் போய்விடும் வகையில் ஆபத்தான நோய் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கழுவி கழுவி ஊத்தும் கமல்: சிரித்து கொண்டே மழுப்பும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோவில் ரூல்ஸை மதிக்க வேண்டும் என்று கமல் சொல்ல சொல்ல, அதை ஒரு நமட்டு சிரிப்புடன் பாலாஜி இருப்பது கமலுக்கு

பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உண்மையா? ராஜூ சுந்தரம் விளக்கம்!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வரும் பிரபுதேவாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்து விட்டதாக

அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கட்டணம்: முதல்வர், முக ஸ்டாலின் போட்டி அறிவிப்பு!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 405 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ

வதந்தியை உண்மையாகி விடலாமா? அரசியலில் குதிக்க கஸ்தூரி முடிவு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் இன்று சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவரது முன் நடிகை கஸ்தூரி பாஜகவில் சேருவார் என்ற வதந்தி இன்று காலை முதல் எழுந்து வந்தது.