1300 ஆண்டு பழமையான விஷ்ணுகோவில் கண்டுபிடிப்பு…
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தானில் 1300 ஆண்டு பழமையான இந்து கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கோவில் இந்து கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மன்னர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் உருவாக்கப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் பாகிஸ்தானின் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பாரிகோட் குண்டாய் எனும் பகுதியில் ஆய்வில் ஈடுபட்டபோது 1300 ஆண்டு பழமையான விஷ்ணுகோவில் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கோவில் கோபுரத்துடன் பாரம்பரியமான முறையில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கூடவே கோவிலுக்கு அருகில் ஒரு குளமும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்துக் கலாச்சாரக் கோவில்களில் பெரும்பாலும் குளித்துவிட்டு கோவிலுக்கு போவதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.
ஸ்வாட் எனும் பகுதியில் உள்ள பாரிகோட் குண்டாய் என்பது ஒரு மலைப்பகுதியாக இருப்பதோடு அது ஒரு சுற்றுலா தளமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பல கலாச்சாரங்களை மையமாகக் கொண்ட கோவில்களும் பாரம்பரிய அமைப்புகளையும் பார்க்க முடியும். அந்த வகையில் 1300 ஆண்டு பழமையான விஷ்ணுகோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதே பகுதியில் பௌத்த கோவில் ஒன்று இருப்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஷாஹி அல்லது காபூர் ஷாஜி (850-1026) என்ற இந்து மன்னனின் ஆட்சிக் காலத்தில் இந்த விஷ்ணு கோவில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர். இந்தியாவில் பெரும்பாலும் விஷ்ணுக்கோவில்களே இருப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் விஷ்ணு கோவில்களுக்கு மத்தியில் 1300 ஆண்டு காலத்திற்கு முன்பு விஷ்ணுவிற்கு கோவில் அமைத்திருப்பதைப் பார்த்து வரலாற்று ஆய்வாளர்கள் தற்போது புது வழிமுறைகளில் தங்களது ஆய்வுகளை தொடங்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout