13 வயதில் ஒலிம்பிக் தங்கம்… உலகச்சாதனைப் படைத்த ஜப்பான் வீராங்கனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார் ஜப்பான் வீராங்கனை மோமிஜி நிஷியா(13). அதோடு மகளிர் ஸ்கேட்போட்டிங் (Skateboarding) பிரிவில் ஜப்பானுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தவரும் இவர்தான். கூடவே 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்பட்ட மகளிர் ஸ்கேட்போட்டிங் பிரிவில் 3 பதக்கங்களையும் ஜப்பான் வீராங்கனைகளே வாங்கி குவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஸ்கேட்போட்டிங் பிரிவிற்கு 13 வயதான ஜப்பான் வீராங்கனை மோமிஜி நிஷியா தகுதிப்பெற்றது குறித்து முன்பே பலரும் வரவேற்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஸ்கேட்போட்டிங் போட்டியில் கலந்து கொண்ட அவர் 15.26 புள்ளிகளுடன் தங்கத்தை வென்றுள்ளார். இதே போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பியூனா நகீயாமா என்பவர் 14.49 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், லீல் என்பவர் 14.64 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
இதனால் 13 வயதில் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனை நிஷியாவிற்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்பு கியோகோ இவாசாகி என்பவர் 14 வயதில் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கத்தை வென்றிருந்தார்.
2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தற்போது சீனா 15 பதக்கங்களுடன் முதல் இடத்தையும் அமெரிக்கா 14 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் வகித்து வருகிறது. ஜப்பான் 10 பதக்கங்களுடன் முன்னணி வரிசையில் காணப்படுகிறது. அடுத்ததாக யுகே 6 பதக்கங்களையும் இந்தியா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout