13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நாக்கை துண்டித்து கண்களை தோண்டிய கொடுமை
Send us your feedback to audioarticles@vaarta.com
உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு துண்டிக்கப்பட்டு கண்கள் தோண்டப்பட்டு பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்களுக்கு போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லிக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள 13 வயது சிறுமி ஒருவர் நேற்று திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை தேடி வந்தபோது சிறுமியின் உடல் அவரது வீட்டில் இருந்து வெகுதூரத்தில் அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையான நேபாள எல்லை அருகே இருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, நாக்கு துண்டிக்கப்பட்டு கண்கள் தோண்டப்பட்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கண்களை தோண்டி நாக்கை துண்டித்த கொடூர குற்றம் புரிந்த குற்றவாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மீது வன்கொடுமை கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கண்கள் தோண்டப்பட்டு நாக்கு துண்டிக்கப்பட்டு கரும்பு காட்டில் பிணத்தை போட்டுவிட்டு சென்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments