கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் மரணம்: தஞ்சையில் பரபரப்பு

கொரோனா வைரசால் கடந்த சில நாட்களாக தினந்தோறும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் 50க்கும் அதிகமானோர் பலியாகி வருவதாகவும் உள்ள செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்கள் பெரும்பாலும் 50 வயதுக்கு மேலானவர்களாகவே இருந்தனர் என்பதும் அவர்களுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்பட ஒரு சில நோய்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இளவயதினர் கொரோனா வைரஸால் மிக அரிதாகவே பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஓரளவு நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால் தஞ்சையில் 13 வயது சிறுவன் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அந்த சிறுவன் மரணம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளி உள்ளன.

கொரோனா சிகிச்சை பெற்று வந்த 13 வயது சிறுவன் கொரோனாவால் மரணம் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனவே கொரோனா வைரஸிலிருந்து அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே இந்த சம்பவம் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது: சாத்தான்குளம் விவகாரம் குறித்து சூர்யா அறிக்கை

சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகிய தந்தை-மகன், காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் மர்ம மரணம்

'தல' பிறந்த நாள் டிபியை வெளியிட்ட வரலட்சுமி: குவியும் பாராட்டுக்கள்

கடந்த சில வருடங்களாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பிறந்த நாள் வரும்போது டிபி என்ற வாழ்த்து புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

சிதம்பரம் ரகசியம் என்றால் என்ன??? வரலாற்றில் ஒளிந்து கிடக்கும் அரிய தகவல்கள்!!!

நம்முடைய தமிழர் பண்பாட்டில் ஒரு வழக்கம் உண்டு. எதை ஒளித்து வைத்தாலும் அதற்கு பெயர் சிதம்பர ரகசியம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த சிதம்பரத்தில்? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

கணவர் கொடுமையால் தற்கொலை செய்த சாப்ட்வேர் எஞ்சினியர்: வைரலாகும் வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் உள்ள சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர் தனது கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்திய

கொரோனா ஏற்படுத்திய தாக்கம்: அட்டைப்பெட்டி படுக்கைகளால் நிரம்பி வழியும் இந்தியா!!!

இந்தியா உலகளவில் கொரோனா வரிச்சைப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து இருக்கிறது