ஒரே நாளில் 13 படங்கள் ரிலீஸ்! என்ன ஆச்சு சங்கத்தின் கட்டுப்பாடு?
- IndiaGlitz, [Sunday,July 29 2018]
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கம் வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக மூன்று தமிழ்ப்படங்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அதுவும் தயாரிப்பாளர் சங்கத்தினரால் அமைக்கப்பட்டுள்ள ரிலீஸ் குழுவின் அனுமதி பெற்றே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடந்த சில வாரங்களாக வாரம் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் மட்டுமே ரிலீசாகி கொண்டிருந்த நிலையில் வரும் வெள்ளியன்று அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி 13 படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடு என்ன ஆயிற்று என்ற கேள்வி எழுந்துள்ளது.
மணியார் குடும்பம், கஜினிகாந்த், காட்டு பய சார் இந்த காளி, எங்க காட்ல மழை, அழகு மகன், நாடோடி கனவு, கடிகார மனிதர்கள், கடல் குதிரை, அரளி, உப்பு புளி காரம், ஒ।.காதலனே, மற்றும் போயா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இதில் தம்பி ராமையாவின் 'மணியார் குடும்பம்' மற்றும் ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.