அடையாறு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப்பெருக்கு… பாதிப்பு எந்தெந்தப் பகுதிகளுக்கு???

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

 

கடந்த சில தினங்களாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து லேசான மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பெரும்பாலான ஏரிகள் தற்போது நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பல ஏரிகளில் உள்ள நீர் அதன் கொள்ளளவை எட்டும்போது தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக சில அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கடந்த முறை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது போலவே மீண்டும் பாதிப்பு இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் முன்பு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகளில் அதிகளவு தண்ணீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் மீண்டும் பாதிப்பு ஏற்படுமோ என்ற பீதி எழுந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள 13 ஏரிகள் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதேபோல ஆரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏரியில் இருந்தும் உபரிநீர் அடையாறு ஆற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோரம் வெள்ளப்பெருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என் அச்சம் மக்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்து இருக்கிறது.

மேலும் தாம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 77 ஏரிகள் தற்போது முழு கொள்ளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் முடிச்சூர், வரதராஜபுரம், திருநீர்மலை, அனாகபுத்தூர், பொழிச்சலூர் கவுல் பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு நிரம்பி வழிவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது அடையாறு ஆற்றின் முடிச்சூர் அமுதம் நகர் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளால் தண்ணீரின் வேகம் தடைபட்டு நிற்பதாகவும் இதை தீயணைப்பு துறையினர் உதவியுடன் தற்போது அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே செம்பரபாக்கம் ஏரியில் நீர் வேகமாக நிரம்பிவருகிறது எனவும் இதனால் ஓரிரு நாளில் உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதாகவும அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் முன்பு அப்பகுதியல் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டதைப் போலவே மீண்டும் வெள்ளப்பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் தற்போது மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

More News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு உதவிய பிரபல நடிகர்கள்!

'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறித்த செய்தியை நேற்று பார்த்தோம் 

'சம்பவம் தரமா இருக்கு': 'வலிமை' அப்டேட் தந்தாரா எச்.வினோத்?

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கதாநாயகியாகும் விக்ரம் பட குழந்தை நட்சத்திரம்: முக்கிய கேரக்டரில் ப்ரியாமணி!

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தெய்வத்திருமகள்' மற்றும் 'சைவம்' ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா அர்ஜூன்.

காலத்தை கணிப்பது யார்? 45 மணி நேர விறுவிறுப்பான டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 44 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 45வது நாள் என்பதால் 45 மணி நேர டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது

வாசன் ஐகேர் மருத்துவமனை அருண் மரணத்தில் மர்மமா? 

வாசன் ஐகேர் மருத்துவமனைகளின் உரிமையாளர் அருண் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக இறந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு வயது 51