பாதியில் படிப்பை விட்டு பஞ்சர் ஒட்டிய மாணவிக்கு உதவிய சிவகார்த்திகேயன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் பணம் இல்லாத காரணத்தினால் பஞ்சர் ஒட்டும் கடையில் பணிபுரிந்து வந்த மாணவி ஒருவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த செலவில் படிக்க வைத்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
12ஆம் வகுப்பு படித்த தேவசங்கரி என்ற மாணவி நர்சிங் கோர்ஸ் படிக்க ஆசைப்பட்டாலும், அவரது குடும்பத்தின் வறுமை காரணமாக படிக்க முடியவில்லை. இதனை அடுத்து அவர் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பஞ்சர் ஓட்டும் மாணவியை ஊடகம் ஒன்று பேட்டி எடுத்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை பார்த்த சிவகார்த்திகேயன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு ’நீ விரும்பும் படிப்பை நான் படிக்க வைக்கின்றேன், என்ன படிக்க விரும்புகிறா? என்று கேட்டதாகவும் அதற்கு தேவசங்கரி நான் நர்சிங் படிக்க விரும்புகிறேன் என்னை நர்சிங் படிக்க வையுங்கள் என்றும் கூறினாராம்.
இதனையடுத்து நாகப்பட்டினத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் அட்மிஷன் வாங்கி கொடுத்து அனைத்து செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த மாணவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பொங்கல் தினத்தில் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயன் புது துணி எடுத்து கொடுத்ததாகவும் அந்த துணியை அணிந்து கொண்டு தாங்கள் பொங்கல் கொண்டாடியதாகவும் கூறிய தேவசங்கரி, என்னைப் படிக்க வைத்த சிவகார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி என்றும் நான் படித்து என்னை போலவே கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments