பள்ளி சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா: அதிர்ச்சியில் சக மாணவிகள்!
- IndiaGlitz, [Thursday,January 21 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த 19ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது என்பதும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சுமார் 80% மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்திருந்தார்கள் என்றும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் என்ற பள்ளியில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 19ஆம் தேதி முதல் பள்ளிக்கு சென்றார். அவருக்கு முதல் நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவு சற்று முன்னர் வந்த நிலையில் அந்த மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் தங்கியிருந்த விடுதியில் உள்ள 36 மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
பள்ளிக்கு சென்ற மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள தகவல் அந்த பள்ளியில் உள்ள சக மாணவியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது