தமிழகத்தில் இன்று 121 கொரோனா பாசிட்டிவ்: சென்னையில் மட்டும் 103

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 121 பேர் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2058ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 121 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 103 பேர்கள் என்றும் இதனையடுத்து சென்னையில் மட்டும் 673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவரும், நாமக்கல் மாவட்டத்தில் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் குணமடைந்ததையடுத்து, இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,128 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

More News

பிரபல நடிகரின் கொரோனா தடுப்பு நிதியுதவி ரூ.30 கோடியாக உயர்வு!

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார் என்பது தெரிந்ததே

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'லட்சுமி பாம்' படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன

விஜயகாந்தின் ஒரே ஒரு போன்கால்: அந்தமான் மீனவர்களுக்கு போய் சேர்ந்த உதவிகள்

அந்தமானில் தமிழக மீனவர்கள் ஊரடங்கு காரணமாக உணவு உள்பட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளை மீண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்த கமல்ஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை பால்கனி அரசு என விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன