ஒரே இரவில் உலகப்புகழ் பெற்ற லண்டன் வாழ் இந்திய சிறுவன்
- IndiaGlitz, [Thursday,August 17 2017]
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற US Scripps National Spelling Bee என்ற ஸ்பெல்லிங் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுமி 12 வயது அனன்யா வினய் என்பவர் வெற்றி பெற்று சாதனை படைத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.உலக அளவில் சாதனை படைத்து வரும் இந்திய குழந்தைகள்
இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த 12 வயது ராகுல் என்ற சிறுவர் ஒரே இரவில் இதே போன்ற ஒரு போட்டியின் மூலம் உலகப்புகழ் பெற்றுள்ளார். லண்டனை சேர்ந்த சேனல் 4 என்ற தொலைக்காட்சி நடத்திய 'சைல்ட் ஜீனியஸ்' என்ற நிகழ்ச்சியில் முதல் சுற்றில் கேட்கப்பட்ட 15 கேள்விகளில் 14 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 15வது கேள்வி கேட்கப்படுவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மிகச்சரியாக அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததன் மூலம் ஒரே இரவில் அவர் உலகப்புகழ் பெற்றுவிட்டார். மேலும் ராகுலின் ஐக்யூ 162 என்று இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இவருடைய ஐக்யூ என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்கு இணையானதாக கருதப்படுகிறது.
20 சிறுவர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதலிடம் பெற்ற ராகுல் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்பெல்லிங் டெஸ்ட், மெமரி ரவுண்டு ஆகியவற்றை வெற்றிகரமாக கடந்த ராகுல் அடுத்து கணித டெஸ்ட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.