நீண்டகாலமா செக்ஸ் இல்லையா? விளைவுகள் குறித்து எச்சரிக்கும் ஆய்வு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதரைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் என்பது இன்பமான ஒரு விசயம் என்பதைத் தாண்டி அது இரு மனங்களையும் இணைக்கும் ஒரு மாபெரும் சக்தியாக விளங்குகிறது. அந்த வகையில் இந்த உடலுறவை முறையான கால இடைவெளிக்குள் செய்யாமல், நீண்டகாலம் இடைவெளி விடும்போது சில ஆபத்தான விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக புளே ஹெல்த் (Flo Health) தலைமை அறிவியல் அதிகாரி அன்னா க்ளெப்சுகோவா எச்சரித்துள்ளார்.
மனிதர்கள் ஒரு வயதிற்குமேல் தொடர்ந்து உடலுறவு பற்றியே அதிகம் சிந்திப்பதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. இப்படி இருக்கும்போது வேலை காரணமாக அல்லது உடல் பாதிப்பு போன்ற ஒருசில காரணங்களுக்காக திருமணமான தம்பதிகள் கூட உடலுறவு கொள்ளாமல் விலகி இருக்கின்றர்.
இதுபோன்ற தருணங்களில் அந்தத் தம்பதிகளுக்கு உடலில் மட்டுமல்ல மனஉறவுகளிலும் சிக்கல் ஏற்படுவதை பல நேரங்களில் பார்த்து இருப்போம். இந்நிலையில் நீண்டகாலம் உடலுறவு செய்யாமல் இருப்பவர்களுக்கு இதயநோய் தொடர்பாக ஆபத்து அதிகம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
மேலும் உடலுறவு இல்லாமல் இருக்கும் சமயங்களில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்துபோகுமாம். இதனால் காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் அதிகம் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நீண்டகாலம் உடலுறவு கொள்ளாமல் இருக்கும் பெண்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியம் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதோடு உடலுறவு கொள்ளாத சமயங்களில் ரத்த ஓட்ட்டம் சீராக இருப்பதில்லை. இதனால் அடுத்த முறை உடலுறவில் ஈடுபடும்போது நாட்டம் குறைந்து போகலாம்.
இவையெல்லாவற்றையும் விட வழக்கமான உடலுறவு இல்லையென்றால் இதய நோய்கள் அதிகம் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனக் கூறும் மருத்துவர்கள் ஒருவேளை தொடர்ந்து சீரான முறையில் உடலுறவு கொள்ளும்போது இந்த நோய்த்தாக்கம் குறைந்து போகிறது என்றும் அறிவுறுத்துகின்றனர்.
பெண்கள் நீண்டகாலமாக உடலுறவில் ஈடுபடாமல் இருக்கும்போது மாதவிடாய் காலத்தில் அதிகவலியை உணர்வதாகக் கூறப்படுகிறது. அதாவது பெண்கள் உடலுறவில் ஈடுபடும்போது எண்டோர்பின் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதாகவும் இதனால் பெண்களுக்கு கருப்பை சுருக்கம் ஏற்பட்டு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை இது குறைக்கிறது.
மேலும் நீண்டகாலமாக உடலுறவில் தொடர்ந்து ஈடுபடாமல் இருக்கும் நபர்களுக்கு லிபிடோ எனப்படும் செக்ஸ் குறித்த விருப்பமே இல்லாமலும் போகிறதாம். அதனால் வழக்கமான கால அளவுகளில் உடலுறவு மேற்கொள்ளுமாறு மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைவிடுத்து நீண்ட இடைவெளி விட்டால் தம்பதிகளுக்குள் இருக்கும் ஆரோக்கியமான உறவு கெட்டுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
வழக்கமான உடலுறவு நன்மைகள்
ஒருநபர் வழக்கமான கால அளவுகளில் உடலுறவு கொள்ளும்போது அவரின் ரத்த ஓட்டம் சீராகி, சீரான ரத்த அழுத்தமும் பராமரிக்கப்படுகிறது.
தலைவலி, உடல்வலி போன்ற சாதாரண நோய்த்தாக்கத்திற்கு உடலுறவு ஒரு சிறந்த நிவாரணியாகவும் கருதப்படுகிறது.
உடலுறவு என்பதை மருத்துவர்கள் ஒரு அத்யாவசியமான உடற்பயிற்சியைப் போலத்தான் கருதுகின்றனர். இதனால் தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகள் வலுப்பெற்று உடலில் உள்ள கலோரியின் அளவும் குறைந்து போகிறது.
மேலும் வழக்கமான உடலுறவு வைத்துக் கொள்பவர்களின் உமிழ்நீரில் நோய்த்தொற்றை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
உடலுறவானது மனதிற்கு அமைதியைத் தந்து மூளையின் சீரான இயக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் நினைவாற்றல் திறனும் அதிகரிக்கிறது.
எனவே தம்பதிகள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் உடலுறவு கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் மனநலம் மேம்பட்டு உடல்நலமும் வலுப்பெறும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments