ஓடிடியில் 1.2 மில்லியன் பார்வைகள்..  உலகளவில் சாதனை படைத்த மாமன்னன் !!

  • IndiaGlitz, [Wednesday,August 02 2023]

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான இப்படம் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததோடு, உலகளவில் 1.2 மில்லியன் பார்வைகளைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜின் அற்புதமான உருவாக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் கோலாகலமான வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக கொண்டாடப்பட்ட வடிவேலு முதன்முறையாக மாறுபட்ட வேடத்தில் மாமன்னனாக வாழ்ந்திருந்தார். பகத் பாசில் ரத்னவேலு வாக வாழ்ந்து காட்ட உதயநிதி மக்களின் மனசாட்சியின் உருவத்தை தன் பாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்தார். ரசிகர்களிடம் மட்டுமல்லாமல், விமர்சகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடமும் இப்படம் பாராட்டுக்களை குவித்தது.

தேனி ஈஸ்வரின் கண்கவர் ஒளிப்பதிவு, செல்வா RK வின் எடிட்டிங், மனதை உருக்கும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை என இப்படம் ஒரு மிகச்சிறந்த உலக சினிமா அனுபவத்தைத் தந்தது.

திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட நிலையில் இப்படம் ஜூலை 27 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. வெளியான வேகத்தில், இந்திய அளவில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்தது. இந்தியா முழுக்க ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்திய மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், உலகளவிலான டாப் பத்து படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும் அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.2 மில்லியன் மக்கள் இத்திரைப்படத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்திய ரசிகர்களை கவர்ந்ததோடு உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து, இந்திய சினிமா வரலாற்றில் ஓடிடி டிரெண்டிங்கில் புதிய சாதனை படைத்து வருகிறது “மாமன்னன்” திரைப்படம்.

More News

நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு? சர்ச்சை ஆனதால் விளக்கம்!!

இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத்திற்கு மத்திய அரசால் ஒய்-பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது

6 முறை தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் தற்கொலை.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

 6 முறை தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் கலை இயக்குனர்  நிதின் தேசாய் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விமல் நடித்த 'துடிக்கும் கரங்கள்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அதிசயத்திற்கு முன் லிப் கிஸ்… ஹாலிடே சென்ற பிரபல நடிகையின் அசத்தல் புகைப்படம்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் திருமணத்திற்கு பிறகு மீண்டும் எண்ட்ரி கொடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படம் எனக்கு அனைத்தையும் கொடுத்தது.. 20 வருடங்களுக்கு முன் ரிலீஸான படம் குறித்து சூர்யா நெகிழ்ச்சி..!

20 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படம் எனக்கு அனைத்தையும் கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.