12 மாம்பழங்களை ரூ.1.20 லட்சத்திற்கு வாங்கிய தொழிலதிபர்: காரணத்தை கேட்டால் அசந்துவிடுவீர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு மாம்பழம் ரூபாய் பத்தாயிரம் என 12 மாம்பழங்களை 1.20 லட்சம் ரூபாய்க்கு தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அப்படி என்ன அந்த மாம்பழத்தில் ஸ்பெஷல் என்றால் எதுவுமே இல்லை அது ஒரு சாதாரண மாம்பழம் தான், ஆனால் ஏன் அந்த மாம்பழத்தை அந்த தொழிலதிபர் 1.20 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார் என்பதை பார்ப்போம்
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த துளசி குமாரி என்ற 8 வயது சிறுமி சாலையில் மாம்பழம் விற்றுக்கொண்டிருந்தார். அவரை பார்த்த செய்தியாளர் ஒருவர் ஏன் நீங்கள் மாம்பழம் விற்பனை செய்கிறீர்கள்? என்று கேட்டபோது தனக்கு ஆன்லைன் வகுப்பு இருப்பதாகவும் தன்னுடைய அப்பாவுக்கு செல்போன் வாங்கித் தரும் அளவுக்கு வசதி இல்லை என்றும் அதனால் மாம்பழம் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் ஒரு செல்போன் வாங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்
இந்த செய்தி மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனை அடுத்து தொழிலதிபர் நரேந்திர கேட் மற்றும் அவருடைய மகன் அமெயா கேட் ஆகிய இருவரும் அந்த சிறுமிக்கு உதவ முடிவு செய்தனர். அந்த சிறுமி மாம்பழம் விற்கும் இடத்திற்கு வந்த அவர்கள், ஒரு மாம்பழம் பத்தாயிரம் ரூபாய் என 12 மாவட்டங்களில் 1.20 லட்ச ரூபாய்க்கு வாங்கிக் கொண்டனர். அதுமட்டுமின்றி அந்த சிறுமிக்கு மொபைல் போன் ஒன்றை இலவசமாக பரிசாக கொடுத்ததோடு, இரண்டு வருடத்திற்கு இன்டர்நெட் கட்டணத்தையும் செலுத்தி உள்ளனர்.இதனையடுத்து அந்த சிறுமி மிகப் பெரிய மகிழ்ச்சி அடைந்தார்
இதுகுறித்து துளசியின் தந்தை கூறியபோது நரேந்திர கேட் அவர்கள் கடவுளின் வடிவத்தில் வந்து எங்களுக்கு உதவி செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இது குறித்த செய்தி தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments