பெயிண்டருக்கு ரூ.12 கோடி ஜாக்பாட்… வாழ்க்கையே புரட்டிப்போட்ட சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் பெயிண்ட்ராக வேலைப்பார்த்து வரும் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இந்தச் சம்பவம் பலரது மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கேரளா மாநிலத்தில் நீண்டகாலமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி ஜாக்பாட் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இதையடுத்து கோட்டயம் அடுத்த அய்மனானம் எனும் கிராமத்தில் வசித்துவரும் சதானந்தம் என்பவர் நேற்று இறைச்சி எடுப்பதற்காக கடைவீதிக்கு சென்றுவந்துள்ளார். அப்போது செல்வம் எனும் லாட்டரி விற்பனையாளரிடம் சதானந்தம் ஒரு லாட்டரி சீட்டையும் வாங்கியிருக்கிறார்.
இதையடுத்து வீடு திரும்பிய சதானந்தத்திற்கு ரூ.12 கோடி பரிசுத்தொகை விழுந்திருக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் சதானத்தின் ஒட்டுமொத்த குடும்பமும் தற்போது மகிழ்ச்சியில் தத்தளித்து வருகின்றனர். மேலும் எனது வாழ்க்கையையே இந்த லாட்டரி புரட்டிப்போட்டிருக்கிறது என்று சதானந்தம் நெகிழ்ச்சி அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com