சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர்? மபியில் நடந்த பரிதாபச் சம்பவம்!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் கடந்த 31 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டது. இந்நிகழ்வின்போது மத்தியப் பிரதேச மாநிலம் யாவத்மால் மாவட்டத்தின் ஒரு பகுதியில் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், அங்கு வந்த 12 குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்குவதற்கு பதிலாக சானிடைசரை தவறுதலாக கொடுத்து விட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் சானிடைசரால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மேலும் தற்போது அவர்கள் நல்ல உடல்நிலையில் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவத்தை அடுத்து யாவத்மால் பகுதியில் பணியாற்றிய 3 ஆஷா பணியாளர்கள் சஷ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் போலியோ நோய்த்தொற்று இல்லாத நாடாக இந்தியா வளர்ந்து உள்ளது. இந்நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்போது சுகாதாரப் பணியாளர்கள் தவறு செய்து இருப்பது கடும் கண்டனத்தை சந்தித்து இருக்கிறது.