காதலுக்கு இடைஞ்சல்: 11ஆம் வகுப்பு மாணவர்-மாணவி செய்த கொலை
Send us your feedback to audioarticles@vaarta.com
கொடைக்கானல் அருகே 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த காதலை கண்டித்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை இருவரும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது
கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு என்ற பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அதே வகுப்பில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்ததை அவர்கள் வீட்டு அருகே உள்ள சுந்தரி என்ற பெண் கண்டித்துள்ளார்
தங்களுடைய காதலுக்கு இடைஞ்சலாக சுந்தரி இருப்பதை அறிந்த காதலர்கள் சுந்தரி தூங்கிக்கொண்டிருந்தபோது துப்பட்டாவை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
கொலைசெய்யப்பட்ட சுந்தரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார் என்பதும் அதன் பின்னர் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முருகானந்தத்தின் சகோதரி மகள் தான் சுந்தரியை கொலை செய்த மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுந்தரியை கொலை செய்த 11ஆம் வகுப்பு மாணவியை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அவரது காதலனை தேடி வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout