கோயம்பேடு சந்தையால் 119 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு:
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நான்கு நாட்கள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பால் நான்கு நாட்களுக்குரிய காய்கறிகள், மளிகைப்பொருட்களை வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்குவதற்காக சுமார் 50ஆயிரம் பேர் குவிந்ததாக கூறப்படுகிறது. தனிமனித இடைவெளி, சமூக விலகல், மாஸ்க் அணிதல் ஆகிய அரசின் அறிவுரை காற்றில் பறக்கவிடப்பட்டு பொறுப்பின்றி நடந்துகொண்டவர்களால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது தெரிய வந்துள்ளது
கோயம்பேடு சந்தையால் நேற்று சுமார் 50 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கோயம்பேடு சந்தை மூலம் இதுவரை 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 119 பேர்களில் சென்னையில் 52 பேர், கடலூரில் 17 பேர், அரியலூரில் 22 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர், விழுப்புரத்தில் 20 பேர் என தெரிய வந்துள்ளது. மேலும் பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்பதும் இவரும் கோயம்பேடு சென்று வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்றவர்கள் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இவர்களில் 550 பேர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்பதும் இந்த முடிவுகள் வந்த பின்னர் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout