அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா: ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றினாலும் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி விட்டது. உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி இருந்தாலும் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மிக அதிக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1169 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாகவும் இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இருப்பதால் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அமெரிக்காவில் இதுவரை 10,403 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதன்பின் சிகிச்சையின் பலனாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி ஆகும்
மேலும் இதுவரை கொரோனா வைரசால் அமெரிக்காவில் மொத்தம் 6059 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 2 லட்சத்து 44 ஆயிரத்து 826 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை அடுத்து இத்தாலியில் 1,15,242 பேர்களும், ஸ்பெயினில் 1,12,065 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments