தமிழகத்தில் 2வது நாளாக 1000ஐ தாண்டிய கொரோனா! சென்னையில் எத்தனை பேர்?
- IndiaGlitz, [Monday,June 01 2020]
தமிழகத்தில் நேற்று முதல்முறையாக ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 1162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23495ஆக உயர்ந்துள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1162 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 964 பேர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15770ஆக அதிகரித்துள்ளது
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 413 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13170 என உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 184ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தமிழகத்தில் இன்று 11377 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 503,339 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.