114 கிமீ வேகத்தில் பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களின் பரிதாப முடிவு!
- IndiaGlitz, [Friday,December 02 2022]
இன்றைய தலைமுறையினர் பைக்கில் மிக வேகமாக செல்வதை ஒரு ஃபேஷனாக வைத்திருக்கிறார்கள் என்பதும் அதனால் ஏற்படும் ஆபத்துகளினால் அவர்களுடைய உயிருக்கு மட்டுமின்றி சாலையில் செல்லும் அப்பாவி நபர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் 114 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் சென்ற நிலையில் வேன் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணியை சேர்ந்த பிரவீன் மற்றும் அவருடைய நண்பர் ஹரி கிருஷ்ணன் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். பைக்கை ஓட்டிய பிரவீன் 114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற நிலையில் பின்னால் உட்கார்ந்திருந்த ஹரிகிருஷ்ணன் அதனை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது திடீரென வேன் குறுக்கே வந்ததை அடுத்து அந்த வேன் மீது பைக் மோதியதன் காரணமாக இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த பிரவீன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக தெரிகிறது.
114 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று தனது விலைமதிப்பில்லா உயிர்களை இழந்த இளைஞர்களின் குடும்பத்தினர் தற்போது கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பைக்கில் நிதானமாக வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் அதிவேகம் ஆபத்தானது என்றும் போக்குவரத்து துறையினர் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இளைஞர்கள் அதனை கருத்தில் கொண்டு தனது குடும்பத்தின் நிலையையும் உணர்ந்து நிதானமான வேகத்தில் பைக்கில் செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
*தரமணி சாலை விபத்து*
— TAMIL ARASAN (@TAMILAR37973811) December 1, 2022
*கல்லூரி மாணவனை தொடர்ந்து பள்ளி மாணவனும் உயிரிழப்பு*
*எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறோம் என செல்போனில் பதிவு செய்தபடி சென்றபோது நேர்ந்த துயரம்*@ZeeTamilNews@chennaipolice_@ChennaiTraffic#collegestudents#BikeAccident pic.twitter.com/MfDYUKO9vO