24 மணி நேரத்தில் 5609 பேர் பாதிப்பு: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

  • IndiaGlitz, [Thursday,May 21 2020]

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,06,750ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,359ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298லிருந்து 45,300ஆக உயர்ந்துள்ளது என்றும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303லிருந்து 3,435ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், மூன்றாவது இடத்தில் குஜராத்தும், நான்காவது இடத்தில் டெல்லியும், ஐந்தாவது இடத்தில் மத்திய பிரதேச மாநிலமும் உள்ளது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,085,521 ஆக உயர்ந்துள்ளது என்பதும், உலக அளவில் பலி எண்ணிக்கை 329,731ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உலக அளவில் 2,021,666 பேர்கள் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 1,591,991 பேர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரஷ்யாவில் 308,705 பேர்களும், பிரேசிலில் 293,357 பேர்களும், ஸ்பெயினில் 279,524 பேர்களும், இங்கிலாந்தில் 248,293 பேர்களும், இத்தாலியில் 227,364 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.