1,100 ஆண்டு பழமையான தங்கப்புதையல்!!! மகிழ்ச்சியில் தொல்லியல் துறை!!!

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

 

இஸ்ரேல் நாட்டில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 1,100 ஆண்டுகால பழமையான தங்கப்புதையல் ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார். இதனால் அப்பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் மேலும் தொல்லியல் ஆய்வுகளைத் தொடரவும் அக்குழு முடிவு செய்திருக்கிறது.

இஸ்ரேல் நட்டின் ரிஹோவோட் தொழிற்பூங்கா அருகே தொல்லியல் துறையினர் பல மாதங்களாக ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த ஆய்வுகளில் பல தன்னார்வலர்களும் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர். அப்படி தன்னார்வலராக இணைத்துக் கொண்ட இளைஞர் ஒருவர் 1,100 ஆண்டு பழமையான தங்கப்புதையலைக் கண்டுபிடித்துள்ளார். அப்புதையல் மண்ணில் மூடப்பட்டு இருந்ததாகவும் மீண்டும் எடுத்துக் கொள்ளும் நோக்கத்தில் வைக்கப்பட்ட புதையலாக இருக்கலாம் எனவும் தொல்லியல் குழு தெரிவித்து இருக்கிறது.

அப்புதையலில் மொத்தம் 425 தங்க நாணயங்கள் அதுவும் 24 கேரட் தூயத் தங்கத்துடன் இருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்மொத்த எடை 845 கிராம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புதையல் இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஜெர்மன் போன்ற ஆட்சிப் பகுதிகளை ஒன்றாக இணைத்து ஆட்சி செய்த அபாசித் ஹலிப்ஹெட் என்ற இஸ்லாமிய மன்னர் ஆட்சி காலத்தது என்றும் தொல்லியல் குழு தெரிவித்து இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வேறுசில பொருட்கள் அல்லது ஆவணங்கள் கிடைக்கலாம் என மகிழ்ச்சி தெரிவித்த தொல்லியல் துறையினர் அப்பகுதியில் தற்போது தற்காலிக குடில்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் தர்ஷனின் முதல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு: நாளை டீசர் வெளியீடு!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் டைட்டில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது

எஸ்பிபிக்காக மீண்டும் கூட்டுப்பிரார்த்தனை: தேதி, நேரம் அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

கொரோனாவால் பலியானவருக்கு கிடைத்த ரூ.60 லட்சம்: திடீரென பங்கு கேட்ட இரண்டாவது மனைவி

கொரோனாவால் பலியாகிய ரயில்வே போலீஸ் குடும்பத்திற்கு கிடைத்த நிதியுதவியான ரூ.60 லட்சத்தில் திடீரென பங்கு கேட்டு பலியானவரின் இரண்டாவது மனைவி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு

ரசிகரின் போஸ்டரை ரீடுவிட் செய்த சூர்யா: இணையத்தில் வைரல்

கடந்த சில ஆண்டுகளாக படக்குழுவினர்கள் வெளியிடும் போஸ்டரை போலவே அச்சு அசலாக ரசிகர்கள் டிசைன் செய்யும் போஸ்டர்களும் உள்ளது என்பதும் எது உண்மையான படக்குழுவினர்

நேரில் தாக்கும் எதிரிக்கு பயப்பட வேண்டாம், புகழ்ந்து பேசும் நண்பனுக்கு பயப்படுங்கள்: ராதிகா

பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்' என்ற திரைப்படத்தில் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகை ராதிகா, சமீபத்தில் திரையுலகில் 42 ஆண்டுகள்' என்ற மைல்கல்லை எட்டினார்.