விஞ்ஞான உலகிற்கு ஏற்ற 1100 செல்போன் குறைதீர்ப்பு திட்டம்- தமிழக முதல்வர் அதிரடி!
- IndiaGlitz, [Thursday,February 18 2021]
சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகமும் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பிரச்சாரத்திற்கு இடையே பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1100 இலவச செல்போன் குறைதீர்ப்பு சிறப்புத் திட்டத்தை தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம் தமிழக மக்கள் தங்களுடைய குறைகளை உடனுக்குடன் தமிழக அரசிடம் நேரடியாக தெரிவிக்க முடியும். அப்படி பெறப்படும் குறைகளை விரைந்து தீர்க்க உதவும் வகையில் தமிழக முதல்வர் இந்த அதிரடி திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிலையில் 1100 இலவச செல்போன் குறைதீர்ப்பு உதவியுடன் தமிழக அரசு பல்வேறு சிக்கலைகளை விரைந்து தீர்த்து வருகிறது. இதுமட்டும் அல்லாது முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் குறைதீர் திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்பட்ட சுமார் 55 லட்சத்து 25 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டு உள்ளது எனத் தமிழக முதல்வர் பிரச்சாரத்திற்கு இடையே தெரிவித்து உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், நவீன விஞ்ஞான உலகத்திற்கு ஏற்ற திட்டமாக 1100 இலவச செல்போன் குறைதீர்ப்பு திட்டம் அமைந்து இருக்கிறது என்றும் கருத்துத் தெரிவித்தார்.