அலைக்கு நடுவிலும் சுவாரசியம்… கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 110 வயது தாத்தா!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால் ஒட்டுமொத்த தற்போது இந்தியாவே பீதி அடைந்து இருக்கிறது. அதிலும் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பினால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அதோடு ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை எனப் பல்வேறு இன்னல்களை கொரோனா நோயாளிகள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹைத்ராபாத்தை சேர்ந்த 110 வயதான தாத்தா ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து வெற்றிக்கரமாக மீண்டு வந்துள்ளார். 110 வயதான ரமநந்த தீர்த்தம் தாத்தா கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறியால் ஹைத்ராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று இருந்தும் இவருக்கு சுவாசக் கோளாறு எதுவும் ஏற்படாமல் நல்ல உடல்நிலையுடன் தற்போது நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த காந்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் 110 வயதிலும் கொரோனாவால் இவருக்கு சுவாசக் கோளாறு ஏற்படவில்லை. தற்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது எனக் கூறி இருக்கின்றனர். அதேபோல மகாராஷ்டிராவை சேர்ந்த 105 வயது தேனு உமாஜி சவான் என்பவரும் 95 வயதான அவரது மனைவி மோட்டாபாய் தேனு சவான் என்பவரும் சமீபத்தில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து வெற்றிக்கரமாக மீண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா எனும் அரக்கனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கும் கொடூரம் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. அதோடு சாக்கு மூட்டைகளைப் போல பிணங்களை அடுக்கி வைத்துக் கொண்டு இருக்கும் இந்த சயமத்தில் 110 வயதிலும் கொரோனாவில் இருந்து மீண்ட சம்பவம் தற்போது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments