நம்பிக்கையோடு இருங்கள்: இஸ்ரோ சிவனுக்கு தமிழக சிறுமி கடிதம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டரை மீண்டும் இயங்க செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவுபகலாக தீவிரமுயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களுக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளூக்கும் ஆறுதல் கூறும் வகையில் தமிழகத்தை சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி நதியா என்பவர் ஒரு கடிதம் எழுதி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சந்திரியான் -2 விண்கலம் நிலவில் தரையிறங்குவது பெரும் சாதனைதான். சந்திரியான் -2 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது என்றும், பின்பு விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தகவல் தொடர்பை இழந்து விட்டது என்று அறிந்த பின் நான் வருத்தம் அடைந்தேன். ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிந்தததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
பணிகள் நன்றாக முடிந்து மேலும் புதிய தகவல்களை சந்திரியான் -2 பெற்று தரும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். உங்கள் நம்பிக்கையை நீங்கள் கை விடாதீர்கள். இஸ்ரோவின் இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பும், எங்களை போன்றோரின் பிரார்த்தனையும் விக்ரம் லேண்டரை செயல்படவைக்கும் என்ற நம்பிக்கை 100% உறுதியானது.
விக்ரம் லேண்டருக்கு எந்த விதம் சேதமும் இல்லாமல் இருப்பது உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்களின் நம்பிக்கையால்தான்.முயற்சி திருவினையாக்கும். கடின உழைப்புக்கு வெற்றி நிச்சயம்" என்று எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை எழுதிய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments