லாட்டரி வாங்க காசு கூட இல்லாத 11 பெண் தூய்மை பணியாளர்கள்…. கோடீஸ்வரர் ஆன தகவல்…!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் அதிகாரப்பூர்வமாக லாட்டரி விற்பனைக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அரசாங்கமே அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதால் அவ்வபோது சிலர் ஜாக்பாட் அடித்து ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் 11 தூய்மை பணியாளர்கள் இந்த முறை கோடீஸ்வரர்களாக மாறியிருப்பது பலரிடையே சுவாரசியத்தையும் கூடுதல் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பரப்பனங்கடி நகராட்சி பகுதியில் ஹரித கர்ம சேனா குழு எனும் அமைப்பை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அப்பகுதிகளில் உள்ள மக்காத குப்பைகளை வீடு வீடாகச் சென்று அகற்றி வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் 9 பெண்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு எப்போதும்போல டீ அருந்துவதற்காக அமர்ந்திருந்தபோது லாட்டரி வங்கலாம் என்று சிந்தித்துள்ளனர்.
இதையடுத்து ஆளுக்கு ரூ.25 என்கிற வீதம் பணத்தைப் போட்டு ரூ.250 மான்சூன் பம்பர் பிஆர்92 டிக்கெட்டை வாங்க முயற்சித்து உள்ளனர். பம்பர் பரிசு என்பது பொதுவாக பெரிய தொகையை கொண்டிருக்கும். அப்படி மழைக்காலத்தை ஒட்டி ரூ.10 கோடி பம்பர் பரிசு லாட்டரியை வாங்குவதற்காக முயற்சித்தபோது அப்பெண்களிடம் காசு பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் ரூ.12.50 தொகைக்காக தங்களுக்குத் தெரிந்த மற்றொரு பெண்ணை அந்தக் குழு சேர்த்துக்கொண்டு ஒரு வழியாக 11 பெண்கள் சேர்ந்து ரூ.250 ஒரு லாட்டரியை வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் மழைக்கால பம்பர் பரிசு ரூ.10 கோடிக்கான பரிசுத்தொகை புதன்கிழமை அறிவிக்கப்பட்டு இருககிறது. அதில் எம்பி200261 என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கிய 11 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 கோடிக்கான ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதையடுத்து 11 பெண்களும் ஒரே நாளில் கோடீஸ்வரிகளாக மாறியுள்ளனர்.
இதற்கு முன்பு கேரளா பம்பர் லாட்டரி சீட்டை வாங்கியபோது இந்தப் பெண்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை கிடைத்தாகவும் இதனால் 4 ஆவது முறையாக தற்போது லாட்டரி வாங்கியதில் கோடீஸ்வரிகளாக மாறியிருப்பதாகவும் கூறியுள்ள நிலையில் இன்னும் எங்களால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் மழைக்கால பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி முதல் பரிசு, ரூ.10 லட்சம் இரண்டாம் பரிசு, 5 லட்சம் மூன்றாம் பரிசு, அடுத்து 3 லட்சம், கடைசியாக 1 லட்சம் வரை பல்வேறு பரிசுகள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout