இந்திய மணமகன் - ஆப்கன் மணமகள்: 11 ரூபாயில் நடந்த எளிமையான திருமணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் கூறப்படுவதையும் திருமணத்திற்காக கோடிக்கணக்கில் ஆடம்பரமாக செலவு செய்யப்படுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் சமீபத்தில் ஒரு திருமணம் வெறும் ரூ.11 செலவில் நடந்துள்ளதாக ஆச்சரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரை சேர்ந்த நபிஜதா ஃப்ரீஸ்டா என்பவர் சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் ஜாஹித் அலி என்பவரை பார்த்ததும் மனதை பறிகொடுத்தார். முதலில் நட்பாக பழகிய இருவரும் பின்னர் காதலாகி இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
ஒரு இந்தியரை திருமணம் செய்ய தனது பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்ற சந்தேகம் நபிஜதா மனதில் இருந்த நிலையில் அவர் தனது பெற்றோருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார். உண்மைக்காதல் என்றும் தோற்காது என்பதற்கேற்ப நபிஜாதா பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 9ஆம் தேதி இருவருக்கும் எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு ஆன செலவு வெறும் ரூ.11 என்பதும், இதுகூட திருமணத்தை நடத்தி கொடுத்த மதகுருவிற்கு அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோடிக்கணக்கில் செலவு செய்த திருமணங்களில் கூட சில அதிருப்திகள் மணமகன், மணமகள் வீட்டார்களுக்கு இருக்கும். ஆனால் ரூ.11 செலவில் முழு திருப்தியுடன் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com