4 வருடங்களில் 11 திருமணம். கோடிக்கணக்கில் பணம், நகை சுருட்டிய இளம்பெண் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
உ.பி. மாநிலத்தை சேர்ந்த மேக்னா என்ற பெண் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள பணக்காரர் மற்றும் உடல் ஊனமுற்றவர்களை மேட்ரிமோனியல் இணையதளங்களில் இருந்து தேர்வு செய்து அவர்களிடம் தான் மிகவும் ஏழ்மையாக இருப்பதாகவும், தனக்கு பண உதவி செய்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி இதுவரை 11 பேர்களை திருமணம் செய்துள்ளார். ஒவ்வொருவரிடமும் குறைந்தது 20 நாட்கள் மட்டுமே இருந்துள்ள மேக்னா, ஏதாவது ஒரு காரணத்தை கூறி உடலுறவையும் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில் கொச்சியை சேர்ந்த வைடில்லா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போதுதான் இவரைப் போலவே பலர் புகார் கொடுத்தது தெரிய வந்தது. இதனால் மேக்னாவை பிடிக்க கொச்சி போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் கொச்சி போலீஸார் மேக்னாவை, உத்தர பிரதேச மாநில போலீஸாரின் துணையுடன் நேற்று கைது செய்தனர்.
மேக்னா ஏமாற்றி திருமணம் செய்தவர்களில் ஒருசிலரின் பட்டியல்
2012ம் ஆண்டு ராஜ்பூரை சேர்ந்த ராஜேஷ் கோபிந்த். இவரிடம் ரூ. 90 லட்சம் ஏமாற்றப்பட்டது.
2014ல் குஜராத்தை சேர்ந்த ஹேமந்த். இவரிடம் 13 லட்சம் ஏமாற்றப்பட்டது.
2015ல் ஜோத்பூரை சேர்ந்த சந்தேஷ் சோப்ரா. இவரிடம் ரூ.15 லட்சம் லட்சம் ஏமாற்றப்பட்டது..
2015ஆம் ஆண்டு கொச்சி,காலூரை சேர்ந்த வைடில்லா. .
குஜராத்தை சேர்ந்த அருண்குமார் என்பவரையும், மேலும் ஒருவரையும் திருமணம் செய்து 10 லட்சம் ஏமாற்றியுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments