ஆக்சிஜன் பற்றாக்குறை: செங்கல்பட்டு மருத்துவமனையில் 11 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்!

  • IndiaGlitz, [Wednesday,May 05 2021]

செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நேற்றிரவு 11 நோயாளிகள் உயிரிழந்ததாகப் பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று இரவு 10 மணி முதலே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் இதையடுத்து ஒரு சில நிமிடங்களிலேயே 4 நோயாளிகள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் வரவழைக்கப் பட்டதாகவும் அடுத்த 3 மணிநேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப் பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இடைப்பட்ட நேரத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர்.

இதில் எத்தனை பேர் கொரோனா நோயாளிகள் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த உயிரிழப்பு குறித்து கேள்விபட்ட உடனேயே அம்மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு விசாரணை நடத்தி உள்ளார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து பேசிய அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. இந்த உயிரிழப்பு எதிர்பாராத விதமாக நடந்து விட்டது எனவும் விளக்கம் அளித்து உள்ளார்.

டெல்லி, மும்பை, உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் முதல் முறையாக இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து செங்கல்பட்டில் அதிகளவு கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 நோயாளிகள் உயிரிழந்து இருப்பதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

More News

நாம் தமிழரின் வாக்குகள் பிற கட்சிகளின் வெற்றி தோல்வியை  தீர்மானிக்கிறதா... ஓர் அலசல்...!

பெரும்பாலும் இளைஞர்கள், அரசியல் கட்சியினரிடத்தில் பணம் வாங்காதவர்கள், சாதி மதம் பார்க்காதவர்களின் ஓட்டுக்கள் நாம் தமிழருக்கே என்ற கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது.

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி  காலமானார்...!

சமூக செயற்பாட்டாளர்  டிராஃபிக் ராமசாமியின் உடல் கவலைக்கிடமாக  இருந்த நிலையில், அவர் காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ஷிவானிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பரசுபாண்டியன்: அப்புறம் என்ன செய்தார் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஷிவானி என்பதும் அவர் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அமைதியாக இருந்த போதிலும் கடைசி நேரத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில்

நடவடிக்கை கடுமையாக இருக்கும்: கட்சி நிர்வாகிகளுக்கு கமல் எச்சரிக்கை!

கட்சியை சீரமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்றும், அது கடுமையாக இருக்கும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஸ்டாலின் - கமல்ஹாசன் சந்திப்பு: வைரலாகும் புகைப்படம்!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சி பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துள்ளது என்பதும் தெரிந்ததே