10ஆம் வகுப்பு தேர்வு தேதி மற்றும் அட்டவணை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்வு காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் இம்மாதம் இந்த தேர்வின் அட்டவணை வெளியிடப்படும் என்று சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஜூன் 1ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வின் அட்டவணையையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த அட்டவணை இதோ:
ஜூன் 1 - மொழித்தேர்வு
ஜூன் 3 - ஆங்கிலம்
ஜூன் 5 - கணிதம்
ஜூன் 6 - மாற்று மொழித்தேர்வு
ஜூன் 8 - அறிவியல்
ஜூன் 10 - சமூக அறிவியல்
ஜூன் 12 - தொழிற்பிரிவு
அதேபோல் தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2ல் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments