10ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: கணவர் குடும்பத்தை பழிவாங்க திட்டமிட்ட சகோதரி கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
கணவரின் குடும்பத்தை பழிவாங்க 10ஆம் வகுப்பு படித்து வரும் தனது சகோதரியை தனது கணவரின் சகோதரருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக பெண்ணொருவர் காவல்துறை கொடுத்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நதிவதனா என்ற பெண்ணுக்கு செல்வம் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நதிவதனாவுக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக நதிவதனா தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல் நிலையம் சென்ற நதிவதனா, பத்தாம் வகுப்பு படித்து வரும் தனது சகோதரியை மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது கணவரின் சகோதரருக்கு தனது மாமியாரும் அவரது குடும்பத்தினர்களும் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக புகார் அளித்தார். இது குறித்த வீடியோ ஆதாரங்களையும் அவர் காவல்துறையில் ஒப்படைத்திருந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து நதிவதனாவின் மாமியார் கணவர் உள்பட அனைவரையும் விசாரித்தபோது 10ஆம் வகுப்பு மாணவிக்கு நதிவதனாவின் கணவரின் சகோதரருக்கு திருமணம் செய்து வைத்தது உண்மை என்று கண்டுபிடித்தனர். ஆனால் அது மட்டுமின்றி இந்த திருமணம் நதிவதனாவின் சம்மதத்துடனே நடந்து உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தனது கணவர் மற்றும் மாமியாருடன் சண்டை போட்டுவிட்டு தாய் வீட்டுக்கு வந்ததால், கணவரின் வீட்டினர்களை பழிவாங்குவதற்காக நதிவதனா இந்த புகாரை கொடுத்ததாகவும், வரதட்சணை இல்லாமல் தனது சகோதரியை தனது கணவர் கணவரின் சகோதரன் விரும்பினார் என்பதால் அவருடைய சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து நதிவதனா, அவருடைய கணவர் செல்வம், மாமியார் காளீஸ்வரி, 10ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த தமிழரசன் என்பவர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அனைவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments