10ம் வகுப்பு தேர்வு வழக்கு: நீதிபதிகள் அதிரடி உத்தரவு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இன்று பிற்பகல் 2.30 மணிக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு என்றும், மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்? என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசின் வழக்கறிஞர் ஆஜராகி கூறியதாவது: விஞ்ஞானிகள் அறிக்கைப்படி எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என்று கணித்திருப்பதாகவும், எனவே 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவில் 11 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டதாகவும், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகும் என்பதால் பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும் என்றும் தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஜூன் 11ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என்றும் அதன்பின்னரே 10ஆம் தேர்வு நடப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த படத்தில் ரஜினி-தனுஷ் பட நாயகி?

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தற்போது 'ஆர்.ஆர்.ஆர். என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும், தமிழ், தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உருவாகி வரும்

சென்னையில் அழுகிய பிணமாக இருந்த அண்ணன் தங்கை டிவி நட்சத்திரங்கள்: அதிர்ச்சி தகவல்

சென்னையில் அண்ணன் தங்கை டிவி நட்சத்திரங்கள் இருவர் ஒரே வீட்டில் குடியிருந்த நிலையில் அந்த வீட்டில் இருவரும் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சீயான் விக்ரம் 60வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன்

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளியும் வீடு திரும்பினார்!!! சாதித்தது எப்படி???

உலக நாடுகள் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும்போது ஒருசில நாடுகள் மட்டும் கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தி வெற்றிப் பெற்றிருக்கிறது.

சச்சினை அவுட் ஆக்கியதால் எனக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தது – டிம் பிரெஸ்னன் கருத்து!!!

இந்திய கிரிக்கெட்டின் கனவு நாயகனான சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் எராளமான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.