10ஆம் வகுப்பு மாணவனை கடத்தி குடும்பம் நடத்திய இளம்பெண் மீது பாய்ந்த போக்சோ சட்டம்
- IndiaGlitz, [Friday,September 21 2018]
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சமீபத்தில் இயற்றப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 22 வயது பெண் மீது போக்சொ சட்டம் பாய்ந்துள்ளது.
தர்மர்புரி அருகே 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் மீது காதல் கொண்ட 22 வயது இளம்பெண் அந்த சிறுவனை கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுவனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிறுவனையும் ஒரு இளம்பெண்ணையும் பெங்களூரில் பார்த்ததாக உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின்படி போலீசார் துணையுடன் சிறுவனின் பெற்றோர் பெங்களூர் சென்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து சிறுவனுடன் ஒரு இளம்பெண் குடும்பம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இருவரையும் தமிழகத்திற்கு அழைத்து வந்த போலீசார் இருவரிடமும் தனித்தனியே விசாரணை செய்தனர். விசாரணையில் சிறுவன் மீது கொண்ட காதலால் அவனை கடத்தி தனிவீடு எடுத்து குடும்பம் நடத்தியதாக இளம்பெண் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.