10ஆம் வகுப்பு தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் சாதனை

  • IndiaGlitz, [Sunday,April 28 2019]

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை 10ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகளும், ஆயிரம் தனித் தேர்வர்களும் எழுதிய நிலையில் மொத்தம் 95.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 93.3%, மாணவிகள் 97% ஆகும். வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று வெளியாகியுள்ள 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் மொபைல் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது

மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது