10ஆம் வகுப்பு தேர்வு ரத்து, ஆல் பாஸ்: முதல்வர் அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்றும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு தமிழகத்தில் அல்ல என்பதும் தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது சரியல்ல என்று கூறியுள்ள தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு படித்த வந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று சற்று முன்னர் அறிவித்துள்ளார். மேலும் இன்டர்னல் அசைன்மென்ட் அடிப்படையில் மாணவர்களுக்கு கிரேடு வழங்கப்படும் என்றும் தெலுங்கானா முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு இன்றி பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தெலுங்கானா மாநில முதல்வரின் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கானாவை அடுத்து அதே போன்று தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசு இதுகுறித்து என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments