10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? முக்கிய தகவல்
- IndiaGlitz, [Monday,May 04 2020]
10ஆம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 27ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மார்ச் 24 ஆம் தேதியே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பத்தாம் வகுப்பு தேர்வு காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எப்போது நடைபெறும்? அல்லது நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவது கட்டாயம் என்று அறிவித்திருந்தார்
இந்த நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் மாத இறுதியில் நடத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதியில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அனைத்து தேர்வுகளையும் 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஜூன் மூன்றாவது வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.