தமிழகத்தில் பள்ளிச் சென்ற மாணவருக்கு கொரோனா பாதிப்பு… பரபரப்பு தகவல்!
- IndiaGlitz, [Thursday,January 21 2021]
தமிழகத்தில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட பள்ளிக்குச் சென்ற சேலம் மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதைக் குறித்து தமிழக அரசு கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த இந்த மாதம் 19 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் சேலம் மாவட்டம் தும்பல் ஊராட்சியில் உள்ள பள்ளிக்குச் சென்ற 10 ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சக மாணவர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து சம்பந்தப்பட்ட அந்தப் பள்ளியும் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளையும் மாணவர்கள் நலன் கருதி 50% மாணவர்களுடன் இரு அமர்வுகளாக தலா 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தும் வகையில் அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்ட ஒரு வழக்கில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் எவ்வித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக முடிவெடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.