காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வு உண்டா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
- IndiaGlitz, [Tuesday,October 12 2021]
நடப்பாண்டில் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு கிடையாது என்றும், நேரடியாக முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது என்பதும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நடப்பாண்டில் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவித்தபடி நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.