ஆம்புலன்ஸ் விபத்து...! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலி....!

  • IndiaGlitz, [Thursday,June 10 2021]

கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் வாகனம் மரத்தின் மீது மோதி விபத்து உண்டானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  

கள்ளக்குறிச்சி மாவட்டம், சேராபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் தான் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால்  கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு  108 ஆம்புலன்சில் இவரை உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ஏரிக்கரை சாலை அருகே வாகனம் வந்துகொண்டிருக்கும் போது, ஆம்புலன்சின் டயர் வெடித்ததில்,  வாகனம் நிலை தடுமாறி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கர்ப்பிணி ஜெயலட்சுமி, அவரின் உறவினர்கள் செல்வி, அம்பிகா உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதில் ஆம்புலன்ஸை ஓட்டிவந்த ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பலத்த காயத்துடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்?  

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார்.

சசிகலாவிடம் சுஜாதா சொன்னது..... அதிமுக-வில் சலசலப்பு...!வெளியான ஆடியோ...!

சசிகலா அதிமுக-வில் இணைவது, கட்சியை ஒருங்கிணைப்பது குறித்த ஆடியோக

டிக்டாக், வீசாட் உள்ளிட்ட செயலிகளுக்கான தடை நீக்கப்பட்டது....!

சமூக வலைத்தளங்களான டிக்டாக், வீசாட் போன்ற செயலிகளுக்கான, தடையை அரசு நீக்கியுள்ளது.

வாத்தி கம்மிங்....! கோவை கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட நோயாளிகள்...!

கோவையில் கொரோனா வார்டில், நோயாளிகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்? சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 65' சூர்யா நடிப்பில் பாண்டிராஜ்