பீகார், உபியில் மின்னல், இடி தாக்கியதில் 107 பேர் பலி: கொரோனா நேரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி

  • IndiaGlitz, [Friday,June 26 2020]

பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இடி மின்னல் தாக்கியதில் 107 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 401 பேர் பலியாகியுள்ள நிலையில் மின்னல் தாக்கி 107 பேர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

பீகார் மற்றும் உபி மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு திடீரென கண்ணை பறிக்கும் மின்னல் மற்றும் காதை பிளக்கும் இடியால் பீகாரில் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் உபி மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருசிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பீகாரில் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பீகாரில் உள்ள முக்கிய நகரங்களான பாட்னா, கதிஹார், அரேரியா, சுபால், கிஷன்கஞ்ச், தர்பங்கா, முசாபர்பூர், கோபால்கஞ்ச், மோதிஹாரி, பெட்டியா, நாலந்தா, சாப்ரா, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பீகார் மற்றும் உபியில் இடி, மின்னலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், ‘பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக மக்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான நிவாரணப் பணிகளை மாநில அரசு ஈடுப்பட்டுள்ளன’ என்று பதிவிட்டுள்ளார்.
 

More News

தயாரிப்பாளர் தனஞ்செயன் சகோதரர் கொரோனாவுக்கு பலி: கோலிவுட் அதிர்ச்சி

கோலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் டாக்டர் தனஞ்செயன் அவர்களின் மூத்த சகோதரர் கொரோனாவால் பலியான செய்தி கோலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

கைக்குழந்தையாக சமந்தா, உடன் இரு சகோதரர்கள்: வைரலாகும் புகைப்படம்

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, இந்த லாக்டவுன் நேரத்தை உபயோகமான பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக வீட்டிலேயே விவசாயம்

மீண்டும் ஆபாச வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்திலும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு

முதல்முறையாக 3500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: 2000ஐ நெருங்கும் சென்னை

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் 2000ஐ தாண்டியது என்பதும் குறிப்பாக கடந்த சில நாட்களாக 2500க்கும் மேற்பட்டவர்கள்

ரூ.1 லட்சம் மின் கட்டணம்: பிரசன்னாவை அடுத்து மின்துறை மீது குற்றம்சாட்டிய தமிழ் நடிகை

சமீபத்தில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு மிக அதிகமாக மின்கட்டணம் வந்ததாகவும் மின் துறையினர் செய்யும் முறைகேடுகளில் இதுவும் ஒன்று என்று டுவிட் செய்திருந்தார். இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய