இன்று ஒரே நாளில் 106 கொரோனா பாசிட்டிவ்: தமிழகத்தில் 1000ஐ தாண்டியதால் பரபரப்பு
- IndiaGlitz, [Sunday,April 12 2020]
தமிழகத்தில் கொரோனாவால் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில் இன்று பேரதிர்ச்சியாக கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 1075 பேர் தாக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர் என்றும், 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளதாகவும், 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் மருத்துவர்கள் என்று தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், இன்று சென்னையை சேர்ந்த ஒருவர் கொரோனாவுக்கு பலியானதாகவும் இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் பீலா ராஜேஷ் கூறினார்.
மேலும் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தாலும் அதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், அந்த கட்டணத்தை அரசே தனியார் மருத்துவமனைக்கு செலுத்திவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.