close
Choose your channels

தமிழகத்தில் இன்று உச்சத்திற்கு சென்ற கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Sunday, April 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் இன்று மட்டும் மேலும் 105 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1477 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 105 கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளில் 50 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் இதனை அடுத்து சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நாளை ஊரடங்கு தளர்வு சென்னைக்கு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 46 என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 411 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இன்று கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பதால் தமிழகத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இதுவரை 40,776 பேர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்பதும் தற்போது 1057 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment