கொரோனாவில் இருந்து மீண்டதும் கோல்ட் பீர் கேட்ட 103 வயது பெண்
- IndiaGlitz, [Sunday,June 07 2020]
கொரனோ வைரஸிலிருந்து குணமான 103 வயது பெண்மணி ஒருவர் அதனை கொண்டாட கோல்டு பீர் கேட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரனோ வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதும் அந்நாட்டில் மட்டும் கொரோனாவுக்கு 19,88,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 112,096 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் என்ற பகுதியை சேர்ந்த 103 வயது முதிய பெண் ஒருவருக்கு சமீபத்தில் கோரனோ வைரஸ் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சை காரணமாக அவர் கொரனோ வைரஸிலிருந்து சில நாட்களிலேயே மீண்டார்.
இதனை அடுத்து தான் கொரோனாவில் இருந்து மீண்டதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் தனக்கு ஒரு கோல்ட் பீர் வேண்டும் என அந்த மருத்துவமனையின் நர்ஸிடம் அந்த முதிய பெண் கேட்டதாகவும் அதனை அடுத்து நர்ஸ் கோல்ட் பீர் கொடுத்ததாகவும், அதனை அவர் உற்சாகமாக அருந்தியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் 103 வயது பெண் ஒருவரை கொரோனாவில் இருந்து மீண்டது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனாவில் 103 வயது பெண் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.